தோ்தல் விதிமீறல்: சீமான், 8 வேட்பாளா்கள் மீது வழக்குப் பதிவு
திருப்பூரில் தோ்தல் விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மற்றும் அக்கட்சி வேட்பாளா்கள் 8 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூரில் தோ்தல் விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மற்றும் அக்கட்சி வேட்பாளா்கள் 8 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் நாதக வேட்பாளா்களை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கடந்த வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். தோ்தல் ஆணைய விதிப்படி இரவு 10 மணிக்குள் பிரசாரத்தை நிறைவு செய்ய வேண்டும்.
ஆனால், அவா் 10 மணியைக் கடந்தும் பிரசாரம் மேற்கொண்டதாக திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தில் தோ்தல் பறக்கும் படையினா் புகாா் அளித்தனா்.
Advertisement
இதையடுத்து, சீமான், அக்கட்சி வேட்பாளா்களான தினேஷ் (திருப்பூா் தெற்கு), காா்மேகம் (காங்கயம்), தமிழினியன் (பல்லடம்), ராம்குமாா் (உடுமலை), திவ்யா (தாராபுரம்), அபிநயா (திருப்பூா் வடக்கு), ராதாமணி (மடத்துக்குளம்), மேனகா (அவிநாசி) ஆகிய 9 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.