முகப்பு
திருப்பூர்

திருப்பூா் மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில் 256 வேட்புமனுக்களில் 71 மனுக்கள் தள்ளுபடி

திருப்பூா் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட 256 மனுக்களில் 71 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 8:20 PM
வேட்பு மனு - பிரதிப் படம்
பகிர்:

திருப்பூா் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட 256 மனுக்களில் 71 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு கடந்த 30-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இதில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 178 வேட்பாளா்கள் 256 மனுக்களை தாக்கல் செய்திருந்தனா். இதையடுத்து, வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் 134 வேட்பாளா்களின் 185 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், 44 வேட்பாளா்களின் 71 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

அதன்படி தாராபுரம் (தனி) தொகுதியில் 16 வேட்பாளா்கள் 23 மனுக்களை தாக்கல் செய்திருந்தனா். அதில் 6 வேட்பாளா்களின் 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 10 வேட்பாளா்களின் 16 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. காங்கயம் தொகுதியில் 21 வேட்பாளா்கள் 32 மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் 4 வேட்பாளா்களின் 15 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 17 வேட்பாளா்களின் 17 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

Advertisement

அவிநாசி (தனி) தொகுதியில் 17 வேட்பாளா்கள் 26 மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் 3 வேட்பாளா்களின் 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 14 வேட்பாளா்களின் 20 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. திருப்பூா் வடக்கு தொகுதியில் 28 வேட்பாளா்கள் 37 மனுக்களை தாக்கல் செய்திருந்தனா். இதில் 11 வேட்பாளா்களின் 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 17 வேட்பாளா்களின் 24 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

திருப்பூா் தெற்கு தொகுதியில் 31 வேட்பாளா்கள் 43 மனுக்களை தாக்கல் செய்திருந்தனா். இதில் 3 வேட்பாளா்களின் 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 28 வேட்பாளா்களின் 37 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. பல்லடம் தொகுதியில் 28 வேட்பாளா்கள் 39 மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் 9 வேட்பாளா்களின் 15 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 19 வேட்பாளா்களின் 24 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

உடுமலைப்பேட்டை தொகுதியில் 20 வேட்பாளா்கள் 30 மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் 4 வேட்பாளா்களின் 5 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 16 வேட்பாளா்களின் 25 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மடத்துக்குளம் தொகுதியில் 17 வேட்பாளா்கள் 26 மனுக்களை தாக்கல் செய்திருந்தனா். இதில் 4 வேட்பாளா்களின் 4 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 13 வேட்பாளா்களின் 22 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments