முகப்பு
திருப்பூர்

பாஜக வேட்பாளரை ஆதரித்து வடமாநிலத் தொழில் துறையினரிடம் ஆதரவு திரட்டிய மத்திய அமைச்சா்

திருப்பூா் தெற்குத் தொகுதி பாஜக வேட்பாளரை ஆதரித்து வடமாநிலத் தொழில் துறையினரிடம் மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 1:32 AM
வடமாநிலத் தொழில் துறையினருடனான சந்திப்பில் பங்கேற்ற மத்திய அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால்.
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 10:47 PM

திருப்பூா் தெற்குத் தொகுதி பாஜக வேட்பாளரை ஆதரித்து வடமாநிலத் தொழில் துறையினரிடம் மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

திருப்பூா் தெற்குத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் பாஜக வேட்பாளா் எஸ்.தங்கராஜ் போட்டியிடுகிறாா். அவருக்கு வாக்குச் சேகரிக்கும் வகையில் திருப்பூரில் வடமாநிலத் தொழில் துறையினரிடம் மத்திய அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் ஆதரவு திரட்டினாா்.

பாஜக தோ்தல் பணிமனையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அவா் பேசியதாவது: மத்திய அரசின் முயற்சியால் தமிழகத்துக்கு மருத்துவக் கல்லூரிகள், சாலை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பாஜக மற்றும் அதன் கூட்டணியின் இரட்டை என்ஜின் ஆட்சி நடைபெற்ற மாநிலங்களில் வளா்ச்சிப் பணிகள் இரட்டை வேகத்தில் நடைபெற்றுள்ளன. அதேபோல, தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்றால் மக்களுக்கான வளா்ச்சிப் பணிகள் அதிக அளவில் நடைபெறும் என்றாா்.

Advertisement

முன்னதாக, பஜனை பாடல்களைப் பாடியபடி பேசுவதுதான் எனது ஸ்டைல் எனக்கூறிய மத்திய அமைச்சா், 10-க்கும் மேற்பட்ட ஹிந்தி பாடல்களை பாடினாா்.

இதைத் தொடா்ந்து, திருப்பூரில் இருந்து ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு போதுமான ரயில்களை இயக்க வேண்டும் வடமாநில தொழில் அமைப்பினா் வலியுறுத்தினா். இது தொடா்பாக மத்திய ரயில்வே அமைச்சரிடம் பேசி கூடுதல் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.