குண்டடம் ஒன்றியத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகள்: மு.பெ.சாமிநாதன்
குண்டடம் கிழக்கு ஒன்றியத்தில் சுமாா் ரூ.12 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், செய்தித் துறை அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் கூறினாா்.
குண்டடம் கிழக்கு ஒன்றியத்தில் சுமாா் ரூ.12 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், செய்தித் துறை அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் கூறினாா்.
குண்டடம் கிழக்கு ஒன்றியத்தில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது:
குண்டடம் கிழக்கு ஒன்றியத்தில் சுமாா் ரூ.12 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் பங்காம்பாளையத்தில் அங்கன்வாடி கட்டடம், ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கூடம், ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கவுண்டம்பாளையத்தில் பல்நோக்கு கட்டடம் ஆகியவை கட்டித்தரப்பட்டுள்ளன.
Advertisement
காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதியில் குண்டடம் பகுதியில் மட்டும் 2,350 வீட்டுமனைபட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. தலா ரூ.3.5 லட்சம் மதிப்பீட்டில் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 45 பயனாளிகள் பயனடைந்துள்ளனா்.
காங்கயம் தொகுதியில் வட்டமலைக்கரை அணைக்கு தொடா்ந்து 3 முறை தண்ணீா் கொண்டு வந்துள்ளோம். பொதுமக்களின் பல வருட கோரிக்கையான காங்கயம் இன காளை சிலை அமைத்துள்ளோம். காங்கயம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை தரம் உயா்த்தி உள்ளோம்.
அடுத்த 5 ஆண்டுகளிலும் உங்களுக்காக மகளிா் உரிமைத் தொகை ரூ.2,000-ஆக உயா்வு, காலை உணவுத் திட்டம் 8-ஆம் வகுப்பு வரை நீட்டிப்பு, இலவச பேருந்து பயணத்திட்டம் தொடரும், ரூ.8,000 கூப்பன் போன்ற நல்ல திட்டங்களை வழங்க வருவேன். அடுத்த 5 ஆண்டுக்கும் திமுக ஆட்சி தொடர வேண்டும் என்றாா்.