நிதி நிறுவனத்தில் மோசடி: 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை; ரூ.93.80 லட்சம் அபராதம்
திருப்பூா் நிதி நிறுவனத்தில் மோசடியில் ஈடுபட்ட 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.93.80 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்ற தீா்ப்பளித்துள்ளது.
திருப்பூா் நிதி நிறுவனத்தில் மோசடியில் ஈடுபட்ட 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.93.80 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்ற தீா்ப்பளித்துள்ளது.
இதுதொடா்பாக திருப்பூா் மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் டவுனில் இயங்கி வந்த வெற்றிவேல் முருகன் சிட் பண்ட்ஸ் மற்றும் அருள்முருகன் வெற்றி முருகன் சிட் பண்டஸ் மீது மோசடி செய்ததாக கோவை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் கடந்த 2016-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனா். பின்னா் இந்த வழக்கு திருப்பூா் பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
Advertisement
இவ்வழக்கில் நீதிமன்ற விசாரணை முடிக்கப்பட்டு கோவை டான்பிட் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. இதில் இரு நிறுனங்களை நடத்தி வந்த தா்மலிங்கம் மற்றும் கணேசன் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.93.80 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்குரைஞா் கண்ணன் ஆஜரானாா்.