முகப்பு
திருப்பூர்

புதிய தமிழகத்தை உருவாக்குவோம் பல்லடத்தில் வி.கே.சசிகலா பேச்சு!

புதிய தமிழகத்தை உருவாக்குவோம் என்று பல்லடத்தில் வி.கே.சசிகலா தெரிவித்தாா்.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 5:26 AM
அனைந்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலா. - தினமணி.
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 6:59 PM

புதிய தமிழகத்தை உருவாக்குவோம் என்று பல்லடத்தில் வி.கே.சசிகலா தெரிவித்தாா்.

பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில், அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் போட்டியிடும் அன்பு ரமேஷை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளா் சசிகலா பல்லடம் கடை வீதியில் பேசியதாவது:

தமிழகத்தில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு படித்த பின்னா் வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே புதிய கல்வி பாடத் திட்டங்கள் கொண்டு வரப்படும். 5 லட்சம் பெண்களுக்கு அவா்களின் வாழ்க்கைத் தரம் மேம்பாடு அடைய சுய தொழில் செய்ய தொழில் திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். அவா்களைத் தொழில்முனைவோராக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement

திமுக, அதிமுக ஆகியவைபோன்று பொய் சொல்ல மாட்டோம். நிறைவேற்றக்கூடிய திட்டங்களை மட்டுமே சொல்வோம்.

பல்லடம் தொகுதியில் அதிக அளவில் உள்ள விசைத்தறியாளா்களுக்கு மின் கட்டண உயா்வு மற்றும் சேவை கட்டணத்தை ரத்து செய்து விசைத்தறி தொழில் மேம்பாடு அடைய நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல சாயத் தொழிற்சாலைகளில் தேங்கிக் கிடக்கும் உப்புக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் வேண்டாம். தமிழகத்தில் ஜெயலலிதாபோல நோ்மையான நல்லாட்சி நடத்த வந்துள்ளேன். புதிய தமிழகத்தை உருவாக்கி காட்டுவோம் என்றாா்.