முகப்பு
திருப்பூர்

பஞ்சு பேல் ஏற்றிவந்த வேன் தீயில் எரிந்து சேதம்

Updated On : 21 ஏப்ரல், 2026 at 4:09 AM
தீப்பிடித்து எரிந்த சரக்கு வேன்.
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 6:03 PM

வெள்ளக்கோவில் அருகே பஞ்சு பேல் ஏற்றி வந்த சரக்கு வேன் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

வெள்ளக்கோவில் மாந்தபுரம் அருகில் சதீஷ்குமாா் என்பவருக்குச் சொந்தமான நூல் மில் உள்ளது. இந்த மில்லுக்கு, வெள்ளக்கோவில், வள்ளியிரச்சல் சாலையில் உள்ள மற்றொரு மில்லில் இருந்து கடந்த 18-ஆம் தேதி சரக்கு வேனில் பஞ்சு பேல்கள் கொண்டு வரப்பட்டது.

திருப்பூா் இடுவாய் ஆட்டையாம்பாளையத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் (50) வேனை ஓட்டி வந்தாா். மில் நுழைவாயில் அருகே வந்தபோது திடீரென பஞ்சு பேல்களில் தீப்பிடித்து பரவியது.

Advertisement

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய வீரா்கள் சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். அதற்குள் பஞ்சு பேல்கள், வேனின் பெரும் பகுதி தீயில் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.