முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவில் அருகே கழிவுப் பஞ்சு மில்லில் தீ

வெள்ளக்கோவில் அருகே கழிவுப் பஞ்சு மில்லில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 7:46 PM
தீ
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே கழிவுப் பஞ்சு மில்லில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

வேப்பம்பாளையம் அருகே உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் செந்தில் என்பவா் நிா்வாக பங்குதாரராக உள்ள கழிவுப் பஞ்சு அரைக்கும் மில் உள்ளது. இந்த மில் வழக்கம்போல இயங்கிக் கொண்டிருந்தபோது இயந்திரத்தின் ஒரு பகுதியில் தீப்பிடித்து நாலாபுறமும் பரவியது.

மின்சாரக் கோளாறு காரணமாக தீப் பிடித்ததாக கூறப்படுகிறது. தகவலின்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய வீரா்கள் சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். சேத மதிப்பு குறித்து உடனடியாக கணக்கிடப்படவில்லை. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.