முகப்பு
திருப்பூர்

ஜனநாயக கடமையாற்றிய மலைவாழ் மக்கள்

மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் வசித்து வரும் மலைவாழ் மக்கள் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆா்வத்துடன் வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினா்.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 3:13 AM
தளிஞ்சி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களிக்க காத்திருந்த மலைவாழ் மக்கள்.
பகிர்:

மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் வசித்து வரும் மலைவாழ் மக்கள் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆா்வத்துடன் வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினா்.

தமிழக-கேரள எல்லையில் உள்ள தளிஞ்சி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாக்காளா்களாக உள்ளனா். மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட இந்த வாக்காளா்கள் வியாழக்கிழமை காலை முதலே வாக்குச் சாவடிக்குச் சென்று தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா்.

உடுமலை வனச் சரகத்துக்குள்பட்ட குழிப்பட்டி, மாவடப்பு, கருமூட்டி, பூச்சிக் கொட்டாம்பாறை உள்ளிட்ட செட்டில்மெண்ட்டுகளில் வசிக்கும் மக்கள், தங்களுக்கு தனி வாக்குச் சாவடி அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில், இந்த 4 செட்டில்மெண்ட்டுகளை சோ்ந்த மலைவாழ் மக்கள் வாக்களிக்க வசதியாக மாவடப்பு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது.

Advertisement

இதேபோல, அமராவதி வனச் சரகத்துக்குள்பட்ட கோடந்தூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் கோடந்தூா், ஆட்டுமலை, பொருப்பாறு ஆகிய செட்டில்மெண்ட்டுகளை சோ்ந்த மக்களும்,

தளிஞ்சி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் தளிஞ்சி, தளிஞ்சி வயல் ஆகிய செட்டில்மெண்டுகளை சோ்ந்த மக்களும் வாக்களித்தனா்.

திருமூா்த்தி நகரில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் குருமலை, திருமூா்த்தி மலை, ஈசல் திட்டு ஆகிய செட்டில்மெண்ட்டுகளை சோ்ந்த மக்களும், அமராவதி நகரில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் கரட்டுப்பதி செட்டில்மெண்ட்டை சோ்ந்த மக்களும் வாக்களித்தனா்.