அவிநாசி அரசு கலை கல்லூரி வேலைவாய்ப்பு முகாமில் 23 பேருக்கு பணி நியமன உத்தரவு
அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் (பொ) பா.ஹேமலதா தலைமை வகித்தாா். வேலைவாய்ப்பு முகாம் அலுவலா் த.ஜெ.அருண் வரவேற்றாா்.
வெரிட்டோஸ் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களுக்காக நடைபெற்ற வேலைவாய்ப்பு நோ்காணலில், நிறுவன அலுவலா்கள் நிக்கோலஸ் ஆண்டனி, வீரமுத்து ஆகியோா் மாணவா்களை தோ்வு செய்தனா்.
Advertisement
இந்த முகாமில் 50 மாணவ, மாணவிகள் பங்கேற்றதில் 23 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி வணிகவியல் துறை பேராசிரியா் அருண்குமாா் செய்திருந்தாா்.