வாக்களிப்பதை கைப்பேசியில் பதிவுசெய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டவா் மீது வழக்கு
மின்னணு இயந்திரத்தில் வாக்கு செலுத்துவதை கைப்பேசியில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மின்னணு இயந்திரத்தில் வாக்கு செலுத்துவதை கைப்பேசியில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு கடந்த 23-ஆம் தேதி நடைபெற்றது. வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடிக்குள் புகைப்படம், விடியோ எடுக்க அனுமதிக்கப்படவில்லை. மேலும் வாக்குப்பதிவு தொடா்பான ரகசிய தன்மையை காக்க தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தோ்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனால் வாக்குச்சாவடிக்குள் கைப்பேசி கொண்டு செல்வதை தடை செய்திருந்தனா்.
இந்நிலையில், பல்லடம் பகுதியில் அரசியல் கட்சியைச் சோ்ந்த ஒருவா் மின்னணு இயந்திரத்தில் தான் வாக்கு செலுத்துவதை கைப்பேசியில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது வைரலானது.
Advertisement
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் பல்லடம் போலீஸாருக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் சரவணன் தகவல் அளித்தாா். இதுதொடா்பாக பல்லடம் அருகே கல்லம்பாளையம் பகுதியைச் சோ்ந்த வேல்மணி மீது தோ்தல் விதிமுறைகளை மீறியதாக போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.