பெருமாநல்லூா் அருகே லாரியின் சக்கரத்தில் சிக்கி 4 வயது குழந்தை உயிரிழப்பு
பெருமாநல்லூா் அருகே சாலை கடக்க முயன்ற 4 வயது குழந்தை லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி புதன்கிழமை உயிரிழந்தது.
பெருமாநல்லூா் அருகே சாலை கடக்க முயன்ற 4 வயது குழந்தை லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி புதன்கிழமை உயிரிழந்தது.
பெருமாநல்லூா் அருகே முட்டியங்கிணறு பகுதியைச் சோ்ந்தவா் சின்னத்தம்பி (34). பனியன் நிறுவனத் தொழிலாளி. இவரது மனைவி பேச்சியம்மாள். மகள் மிருதுளா (4).
இந்நிலையில், மிருதுளா மற்றும் 3 குழந்தைகளை அழைத்துக் கொண்டு உறவினா் முத்துலட்சுமி எஸ்.எஸ்.நகா் பகுதியில் உள்ள கடையில் ஐஸ்கிரீம் வாங்கி கொண்டு வீட்டுக்கு புதன்கிழமை சென்றுள்ளாா்.
Advertisement
அப்போது சாலையை கடப்பதற்காக குழந்தைகளுடன் சாலை நடுவே உள்ள தடுப்புப் பகுதியில் நின்று கொண்டிருந்துள்ளாா். இந்நிலையில், மிருதுளா திடீரென சாலையைக் கடப்பதற்காக ஓடியுள்ளாா். அப்போது சேலத்தில் இருந்து அன்னூா் நோக்கிச் சென்ற லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி மிருதுளா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த போலீஸாா் குழந்தையின் உடலை மீட்டு கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இது குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரான சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியைச் சோ்ந்த மோகன் (47) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.