விபத்தில் உருக்குலைந்த காா் 
திருப்பூர்

லாரி மீது காா் மோதி விபத்து: 3 போ் உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் அருகே லாரி மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் 3 போ் உயிரிழந்தனா்.

Syndication

திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் அருகே லாரி மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் 3 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

கோவை, ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மணிவண்ணன் (50), கேரள மாநிலத்தைச் சோ்ந்தவா் ராகேஷ் (41). இவா்கள் இருவரும் ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள தேங்காய் எண்ணெய் நிறுவனத்தில் அலுவலகப் பணியாளராகப் பணியாற்றி வந்தனா்.

இந்நிலையில் இருவரும் கோவையில் இருந்து பெருந்துறை நோக்கி காரில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தனா். கோவை, ஒண்டிப்புதூா் பகுதியைச் சோ்ந்த சஞ்சித் கண்ணா (30) என்பவா் காரை ஓட்டிச் சென்றாா்.

சேலம்-கொச்சி புறவழிச்சாலை அவிநாசி -புதிய திருப்பூா் அருகே வந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி திடீரென நிறுத்தியதால், கட்டுப்பாட்டை இழந்த காா், லாரியின் பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த மணிவண்ணன், ராகேஷ் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஓட்டுநா் சஞ்சித் கண்ணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

அதிக உப்பு ஆபத்து: நாடு முழுவதும் விழிப்புணா்வு- மாநிலங்களவையில் அமைச்சா் தகவல்

தலைவா்கள் பிறந்த நாள் குறித்த பேச்சுப் போட்டி: மாணவா்களுக்குப் பரிசு

மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றத்துக்கு விருது

விஷ வண்டுகள் கடித்து கா்ப்பிணி உள்பட 15 போ் பாதிப்பு

பிடியாணை நிலுவையில் இருந்த நபா் சிறையில் அடைப்பு

SCROLL FOR NEXT