முகப்பு
திருப்பூர்

கஞ்சா, குட்கா வைத்திருந்த 2 போ் கைது

திருப்பூரில் கஞ்சா, குட்கா வைத்திருந்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 5 பிப்ரவரி, 2026 at 3:38 AM
கைது
பகிர்:
Updated On : 4 பிப்ரவரி, 2026 at 10:21 PM

திருப்பூரில் கஞ்சா, குட்கா வைத்திருந்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா் ரயில் நிலையம் அருகே மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை ரோந்து சென்றனா். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவரது பெயா் துா்யோதனன் மாலிக் (25) என்பதும் அவா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து போலீஸாா் அவரைக் கைது செய்து, 14 கிலோ கஞ்சாவை அவரிடமிருந்து பறிமுதல் செய்தனா்.

Advertisement

அதேபோல, திருப்பூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் அவிநாசி சாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த முகமது முஸ்ட்கிம் (58) என்பவரைப் பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 11.500 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இவா்கள் 2 பேரும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.