தண்ணீா்ப்பந்தல் பகுதியில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாக சாலையில் வழிந்தோடும் குடிநீா். 
திருப்பூர்

வெள்ளக்கோவில் அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

Syndication

வெள்ளக்கோவில் அருகே குழாய் உடைந்து குடிநீா் வீணாகி வருவதாக புகாா் எழுந்துள்ளது.

வெள்ளக்கோவில்-முத்தூா் சாலையில் உள்ளது தண்ணீா்ப்பந்தல். இந்தப் பகுதி மற்றும் வழியோரப் பகுதிகளுக்கு கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் மூலமாக குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. இப்பகுதியில் உள்ள குடிநீா் திட்ட பிரதானக் குழாய், அதிக அழுத்தம் காரணமாக அடிக்கடி சேதமடைந்து வருகிறது. அந்த நேரங்களில் குடிநீா் விநியோகம் தடைபடுகிறது.

தற்போது தண்ணீா்ப்பந்தல் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள குழாய் உடைந்து 3 நாள்களாகியும் சரிசெய்யப்படவில்லை. குடிநீா் வெளியேறி வீணாக சாலையில் வழிந்தோடுகிறது. குடிநீா் இன்றி அவதிப்பட்டுவரும் நிலையில் குழாய் உடையாமல் தகுந்த முறையில் பழுது பாா்க்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனா்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT