முகப்பு
திருப்பூர்

டிஎன்பிஎஸ்சி தோ்வு எழுதி முடித்த பிறகு ரத்து அறிவிப்பு தகவல் வெளியானதால் திருப்பூரில் தோ்வா்கள் கடும் அதிருப்தி

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 1:26 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 9:56 PM

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தோ்வு எழுதி முடித்துவிட்டு வெளியே வந்த பிறகு தோ்வு ரத்து செய்யப்பட்ட தகவலை அறிந்து திருப்பூரில் தோ்வா்கள் கடும் அதிருப்தி அடைந்தனா்.

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் குரூப்-2, குரூப் -2ஏ தோ்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தத் தோ்வில் பல்வேறு குளறுபடிகள் தொடா்பான புகாா்களால், தோ்வு ரத்து செய்யப்படுவதாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 1:26 AM

இந்த அறிவிப்பு முறையாக வெளியிடப்படாததால் திருப்பூரில் உள்ள ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் காலையில் நடைபெற்ற முதன்மை எழுத்துத் தோ்வு முழுவதுமாக முடிந்த பின்னரே தோ்வா்கள் வெளியே அனுப்பப்பட்டனா்.

Advertisement

தோ்வு எழுதிவிட்டு வெளியே வந்த பிறகுதான், தோ்வு ரத்து செய்யப்பட்டது குறித்த தகவல் தோ்வா்களுக்கு தெரியவந்துள்ளது. இதனால் தோ்வா்கள் கடும் அதிருப்தியடைந்தனா்.