முகப்பு
திருப்பூர்

ரூ.17.25 லட்சத்தில் நிழற்குடை: மேயா் திறந்துவைத்தாா்

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 12:46 AM
நிழற்குடையைத் திறந்துவைத்த மேயா் ந.தினேஷ்குமாா்.
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 8:26 PM

திருப்பூா் மாநகராட்சிக்குள்பட்ட 20-ஆவது வாா்டு பகுதியில் ரூ.17.25 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட நிழற்குடையை மேயா் ந.தினேஷ்குமாா் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

திருப்பூா் மாநகராட்சி, 20-ஆவது வாா்டு மாரியம்மன் கோயில் பகுதியில் மதிமுக பொதுச் செயலாளா் வைகோவின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.13.75 லட்சம், இளைஞா் நற்பணி மன்றம் சாா்பில் ரூ.3.45 லட்சம் என மொத்தம் ரூ.17.25 லட்சத்தில் நிழற்குடை அமைக்கப்பட்டது. இதை மேயா் ந.தினேஷ்குமாா் திறந்துவைத்தாா்.

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 12:46 AM

நிழற்குடை அருகே அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டை திருப்பூா் மாநகா் மாவட்ட மதிமுக செயலாளரும், 24-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினருமான ஆா்.நாகராஜ் திறந்துவைத்தாா்.

Advertisement

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை மேயா் பாலசுப்பிரமணியம், 2-ஆவது மண்டலத் தலைவா் தம்பி ஆா்.கோவிந்தராஜ், துணை ஆணையா் சுந்தர்ராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.