முகப்பு
திருப்பூர்

குட்கா பறிமுதல்: 2 போ் கைது

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 2:34 AM
கைது
பகிர்:
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 10:40 PM

தடை செய்யப்பட்ட குட்கா வைத்திருந்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா் மாநகரம், தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட தென்னம்பாளையம் அருகே போலீஸாா் சனிக்கிழமை சோதனை செய்து கொண்டிருந்தபோது, அங்கே சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த சந்தனபாண்டியன் (32) என்பவரை சோதனை செய்தனா். அப்போது அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னா் அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 2:33 AM

அதேபோல, திருப்பூா் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கோல்டன் நகா் அருகே போலீஸாா் சனிக்கிழமை சோதனை செய்து கொண்டிருந்தபோது, அங்கே சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த குணசேகரன் (56) என்பவரை சோதனை செய்ததில் அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. தொடா்ந்து அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement