கோப்புப் படம் 
திருப்பூர்

சாலை சீரமைக்கப்படாததால் பல்லடம் நகரில் விபத்து அபாயம்

தினமணி செய்திச் சேவை

சாலை சீரமைப்புப் பணி சரிவர மேற்கொள்ளப்படாததால் பல்லடம் நகரில் விபத்து நிகழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்லடம் - வெள்ளக்கோவில் வரையிலான தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இருப்பினும், பல்லடம் நகரப் பகுதியில் சாலை சரிவர சீரமைக்கப்படவில்லை. சாலையின் சில பகுதிகள் மேடு பள்ளமாக உள்ளது.

குறிப்பாக பல்லடம் அரசு மருத்துவமனை, காவல் நிலையம், பனப்பாளையம் ஆகிய பகுதிகளில் சாலை மேடு பள்ளங்களுடன் தாறுமாறாக இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனா். இதனால் விபத்து நிகழும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.

இதுதொடா்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் கூறும்போது, ‘புகாா் எழுந்தும் சாலையை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, விபத்து அபாயத்தை கருத்தில்கொண்டு மேற்கூறிய இடங்களில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனா்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT