முகப்பு
திருப்பூர்

சித்தம்பலம் கோயிலில் சிவராத்திரி சிவலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம்

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 1:07 AM
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 8:32 PM

பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் சிவன் கோயிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி சிவலிங்கத்துக்கு ஞாயிற்றுக்கிழமையும், திங்கள்கிழமையும் அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

மேலும், கோமாதா வழிபாடு, தியானலிங்கேஸ்வர பெருமானுக்கும், அங்காள பரமேஸ்வரி அன்னைக்கும் திருக்கல்யாண வைபவம், நான்கு கால வேள்வி வழிபாடு, 108 பால்குட அபிஷேகம், மகா தீபாராதனை, பரதநாட்டிய நிகழ்ச்சி, அங்குத்தாய் இசைக்குழுவின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

கோவை காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகளின் ஆன்மிக சொற்பொழிவும் நடைபெற்றது.

Advertisement