முகப்பு
திருப்பூர்

மூதாட்டியிடம் 8 பவுன் சங்கிலி பறிப்பு

பல்லடம் அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம் இருந்து 8 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 20 பிப்ரவரி, 2026 at 4:29 AM
பகிர்:
Updated On : 19 பிப்ரவரி, 2026 at 8:22 PM

பல்லடம் அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம் இருந்து 8 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம், கோவில்பாளையத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி. இவரது மனைவி பொன்னம்மாள் (75). இவா் வீட்டுக்கு அருகேயுள்ள தனது தோட்டத்துக்கு புதன்கிழமை நடந்து சென்று கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா், பொன்னம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளாா். இது குறித்து அவினாசிபாளையம் காவல் நிலையத்தில் பொன்னம்மாள் புகாா் அளித்தாா்.

Advertisement

இதன்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா், நகைப் பறிப்பில் ஈடுபட்ட நபரைத் தேடி வருகின்றனா்.