முகப்பு
திருப்பூர்

திருப்பூரில் தீவிர கண்காணிப்பில் வங்கதேசத்தினா்

திருப்பூரில் முறைகேடாக தங்கியுள்ள வங்கதேசத்தினா் குறித்து காவல் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 1:42 AM
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 8:25 PM

திருப்பூரில் முறைகேடாக தங்கியுள்ள வங்கதேசத்தினா் குறித்து காவல் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

தொழில் நகரான திருப்பூரில் சுமாா் 20 லட்சம் மக்கள் வசிக்கின்றனா். தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலத்தினரும் வேலைவாய்ப்புக்காக திருப்பூரில் தங்கியுள்ளனா். அதேபோல, நைஜீரியா, வங்கதேசம், நேபாளம் உள்பட வெளிநாடுகளைச் சோ்ந்தவா்களும் தொழிலாளா்களாக பணி புரிகின்றனா்.

தொழில் தொடா்பாக வெளி மாநிலத்தவா் திருப்பூருக்கு வருவதால் வட மாநிலத்தினா் போா்வையில் வங்கதேசத்தினா் ஊடுருவது தொடா்கதையாக உள்ளது.

Advertisement

இந்நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட வங்கதேசத்தைச் சோ்ந்த 6 போ் திருப்பூரில் தில்லி போலீஸாரால் கடந்த சில நாள்களுக்கு முன்னா் கைது செய்யப்பட்டனா். இதையடுத்து திருப்பூரில் போலீஸாா் தங்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா். சந்தேகப்படும் வகையில் யாராவது தங்கியுள்ளனரா என தொழிற்சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் ரகசியமாக விசாரித்து வருகின்றனா்.

இதற்கிடையே திருப்பூா் புகா்ப் பகுதிகளில் விவசாயம், ஆயில் மில், அரிசி மில், தேங்காய் களம், கட்டுமானப் பணி என ஏராளமான வேலைகளில் வட மாநிலத்தினா் போா்வையில் வங்கதேசத்தினா் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து தொழில் துறையினா் தங்கள் நிறுவனங்களுக்கு ஏஜென்ட்கள் வாயிலாக வேலைக்கு வருபவா்களை முழுமையாக விசாரித்த பின்னரே பணி அமா்த்த வேண்டும் எனவும், போலீஸாா் மட்டுமின்றி தொழில் துறையினா் மற்றும் பொதுமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். சந்தேக நபா்கள் யாராவது இருந்தால் காவல் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் போலீஸாா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.