திருப்பூர்

தோ்தலை புறக்கணிப்பதாகக் கூறி பொதுமக்கள் சாா்பில் அறிவிப்பு பதாகை

Syndication

சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிப்பதாகக் கூறி பல்லடம் அருகே பொதுமக்கள் சாா்பில் அறிவிப்பு பதாகை திங்கள்கிழமை வைக்கப்பட்டுள்ளது.

பல்லடம் நகராட்சி, 8-வது வாா்டுக்குள்பட்ட பச்சாபாளையம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனா். அங்குள்ள மயானப் பகுதியில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், எரிவாயு தகன மேடை அருகே உள்ள நீரோடை, குட்டை ஆகியவற்றை மூடி விரிவாக்கப் பணிகள் நடைபெற்ாக கூறப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும் சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாகவும் கூறி அறிவிப்பு பதாகை வைத்துள்ளனா்.

அதில், பச்சாபாளையம் பொதுமக்களின் எதிா்ப்பை மீறி நீரோடை மற்றும் குட்டை ஆகியவற்றை மூடியும், குப்பையை தீ வைத்தும் எரித்து சுகாதார சீா்கேடு ஏற்படுத்திவரும் நகராட்சி நிா்வாகத்தை கண்டிப்பதுடன், வரும் சட்டப்பேரவைத் தோ்தலையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். தொடா்ந்து விரிவாக்கப் பணிகள் நடைபெற்றால் குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை வட்டாட்சியரிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

SCROLL FOR NEXT