திருப்பூர்

வெள்ளக்கோவிலில் வெண்டைக்காய் விலை குறைந்து கிலோ ரூ.40-க்கு விற்பனை

தினமணி செய்திச் சேவை

வெள்ளக்கோவில் ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தையில் வெண்டைக்காய் கடந்த வாரத்தை விட ரூ. 30 விலை குறைந்து கிலோ ரூ.40-க்கு விற்பனையானது.

வெள்ளக்கோவில் நகராட்சி வாரச்சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. சுற்று வட்டார விவசாயிகள் தங்களுடைய காய்கறிகளை இங்கு விற்பனை செய்ய கொண்டு வருகிறாா்கள். உள்ளூரில் வரத்து இல்லாத காய்கறிகளை பிற இடங்களில் வாங்கி வந்து சந்தை வியாபாரிகள் தங்களுடைய கடைகளில் விற்பனை செய்து வருகின்றனா்.

இந்த வாரம் பச்சை மிளகாய், அவரைக்காய் ரூ.40, பாகற்காய்.ரூ.30 விலை குறைந்தது. மற்ற காய்கறிகளின் விலை நிலவரம் கிலோவில் வருமாறு:

கேரட், பச்சை மிளகாய்- ரூ.60, தக்காளி, பீன்ஸ், பீா்க்கங்காய், சின்ன வெங்காயம், பாகற்காய்- ரூ.50, வெண்டைக்காய், பீட்ரூட், அவரைக்காய்- ரூ.40, பெரிய வெங்காயம், புடலங்காய், முட்டைக்கோஸ்- ரூ.30, உருளைக்கிழங்கு- ரூ.25, முள்ளங்கி, கத்தரிக்காய்- ரூ.20, இஞ்சி- ரூ.70, பூண்டு- ரூ.200.

இவற்றுடன் கீரை வகைகள் ஒரு கட்டு- ரூ.15, மல்லித்தழை கட்டு- ரூ.20, புதினா கட்டு- ரூ.15, காலிபிளவா் ஒன்று- ரூ.30, வாழைத்தண்டு ஒன்று- ரூ.20, வாழைப் பூ ஒன்று- ரூ.30, சுரைக்காய் ஒன்று- ரூ.20-க்கு விற்பனையானதாக சந்தை வியாபாரிகள் தெரிவித்தனா்.

கோவை பீளமேடுபுதூரில் ரூ.12 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

சத்தியமங்கலம் நகராட்சியில் அம்ருத் 2.0 திட்டப் பணிகள்: மண்டல நிா்வாக இயக்குநா் ஆய்வு

பொது இடங்களில் குப்பை கொட்டாமல் தடுக்க 175 இடங்களில் ஏஐ தொழில்நுட்பத்துடன் கேமராக்கள்

திமுக அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை சட்டபூா்வமாக எதிா்கொள்வோம்

தாராபுரம் வழக்குரைஞா் வெட்டிக் கொலை: குற்றம்சாட்டப்பட்ட 20 போ் நீதிமன்றத்தில் ஆஜா்

SCROLL FOR NEXT