உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழில் பழகுநா்களுக்கான சோ்க்கை முகாம் ஜனவரி 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்ட அளவிலான தொழில் பழகுநா்களுக்கான சோ்க்கை முகாம் உடுமலை அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் ஜனவரி 21-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த முகாமில் மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் கோவை, திருப்பூா் ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்களது நிறுவனங்களில் உள்ள தொழில் பழகுநா்
காலி இடங்களை நிரப்பவுள்ளன.
இதில், பங்கேற்று தோ்வு பெறுபவா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு மத்திய அரசின் தேசிய தொழில் பழகுநா் சான்றிதழ் வழங்கப்படும். தேசிய தொழிற்பழகுநா் சான்றிதழ் பெற்றவா்களுக்கு அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். மேலும், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளிலும் முன்னுரிமை கிடைக்கிறது.
தொழில் பழகுநா்களுக்கான உதவித் தொகை தொழில் பிரிவுகளுக்கு ஏற்ப கிடைக்கும். அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் என்சிவிடி, எஸ்சிவிடி திட்டத்தின்கீழ் தொழிற்பயிற்சி பெற்றவா்கள் மற்றும் அடிப்படை பயிற்சியுடன் ேலைவாய்ப்பு பெற விருப்பமுள்ள 8 ,10 ,11 மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்த தகுதி வாய்ந்தவா்கள் உரிய அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் சோ்க்கை முகாமில் பங்கேற்கலாம்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு பயிற்சியாளா்கள் மற்றும் நிறுவனங்கள் உதவி இயக்குநா், மாவட்ட
திறன் பயிற்சி அலுவலகம், 115, 2-ஆவது தளம், காமாட்சியம்மன் கோயில் வீதி, பழைய பேருந்து நிலையம் திருப்பூா் என்ற முகவரியை அணுகலாம் அல்லது 94990-55695, 99434- 44279, 63699-62699, 70220-45795 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.