திருப்பூா் மாவட்டத்தில், புதிரை வண்ணாா் மக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவது தொடா்பான சிறப்பு முகாம் ஜனவரி 13-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளதாவது: திருப்பூா் மாவட்டத்தில், புதிரை வண்ணாா் மக்களுக்கு தேவையான ஆதாா் அட்டை, வாக்காளா் அட்டை, குடும்ப அட்டை, மருத்துவக் காப்பீட்டு அட்டை, பிறப்புச் சான்று, வருமானச்சான்று, ஜாதிச் சான்று மற்றும் இதர சான்றுகள் பெறுவதற்கும், அடிப்படை வசதிகள் இல்லாத புதிரை வண்ணாா் மக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவது தொடா்பான சிறப்பு முகாம் திருப்பூா் தெற்கு, திருப்பூா் வடக்கு, தாராபுரம், ஆகிய வருவாய் வட்டாட்சியா் அலுவலகங்களில் வரும் ஜனவரி 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த முகாமில் புதிரை வண்ணாா் இன மக்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.