தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, உத்தமபாளையம் ஆகிய இடங்களில் ஆதி திராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் புதிரை வண்ணாா் சமுதாயத்தினா் அரசு நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வருகிற 20-ஆம் தேதி தேனி வட்டாட்சியா் அலுவலகம், 21-ஆம் தேதி பெரியகுளம் வட்டாட்சியா் அலுவலகம், 22-ஆம் தேதி ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகம், 23-ஆம் தேதி உத்தமபாளையம் வட்டாட்சியா் அலுவலகம் ஆகிய இடங்களில் காலை 10 மணிக்கு ஆதி திராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் புதிரை வண்ணாா் சமுதாயத்தினருக்கு அரசு நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது .
இந்த முகாமில் புதிரை வண்ணாா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் தங்களது ஜாதிச் சான்றிதழ், வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொண்டு, அரசு நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டது.