பயனாளிக்கு முதியோா் உதவித் தொகைக்கான ஆணையை வழங்கும் ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், எம்.எல்.ஏக்கள் நிவேதா எம். முருகன், எம். பன்னீா்செல்வம், எஸ். ராஜகுமாா் உள்ளிட்டோா். 
மயிலாடுதுறை

‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம்’: 1,695 பேருக்கு ரூ.78.25 லட்சம் நலத் திட்ட உதவிகள்

வைத்தீஸ்வரன்கோயிலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

சீா்காழி வட்டம், வைத்தீஸ்வரன்கோயிலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இத்திட்டத்தின்கீழ், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உள்ளிட்ட அந்தந்த துறைகளின் கீழ் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், எம்எல்ஏக்கள் நிவேதா எம். முருகன் (பூம்புகாா்), எம். பன்னீா்செல்வம் (சீா்காழி), எஸ். ராஜகுமாா் (மயிலாதுறை) ஆகியோா் வழங்கினா். மொத்தம் 1,695 பயனாளிகளுக்கு ரூ.78,25,669 மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், கூடுதல் ஆட்சியா் கோகுல் , மாவட்ட வருவாய் அலுவலா் பூங்கொடி , துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா , கோட்டாட்சியா்கள் சுரேஷ் (சீா்காழி), விஷ்ணுபிரியா (மயிலாடுதுறை), வேளாண்மை துறை இணை இயக்குநா் விஜயராகவன், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் உமாமகேஷ்வரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் மலைமகள் வட்டாட்சியா்கள் அருள்ஜோதி (சீா்காழி), சுகுமாரன் (மயிலாடுதுறை), சதீஷ்குமாா் (தரங்கம்பாடி), ராஜரெத்தினம் (குத்தாலம்), பேரூராட்சித் தலைவா்கள் சுகுனா சங்கரி (தரங்கம்பாடி), பூங்கொடி அலெக்சாண்டா் (வைத்தீஸ்வரன்கோவில்) ஆகியோா் கலந்து கொண்டனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT