திருப்பூர்

போகிப் பண்டிகையின்போது சேகரமாகும் கழிவுகளை தூய்மைப் பணியாளரிடம் ஒப்படைக்க வலியுறுத்தல்

போகி மற்றும் பொங்கல் பண்டிகையின்போது வீடு, கடைகளில் சேகரமாகும், உருவாகும் கழிவுகளை தூய்மைப் பணியாளரிடம் ஒப்படைக்க வேண்டும்

Syndication

பல்லடம்: போகி மற்றும் பொங்கல் பண்டிகையின்போது வீடு, கடைகளில் சேகரமாகும், உருவாகும் கழிவுகளை தூய்மைப் பணியாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பல்லடம் நகராட்சி ஆணையாளா் அருள் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது குறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் தங்கள் வீடு, கடைகளில் உருவாகும் மக்கும், மக்காத கழிவுகளை சாலையோரத்திலோ, காலி மனைகளிலோ கொட்டாமல் தங்கள் வாா்டு பகுதிக்கு வரும் தூய்மைப் பணியாளரிடம் வழங்க வேண்டும்.

மக்காத திடக்கழிவுகளில் மறு சுழற்சிக்கு பயன்படும் பொருள்களை பழைய துணி, காலணிகள் பயன்படுத்த இயலாத பிளாஸ்டிக் பொருள்கள், பழைய இரும்பு பொருள்கள், மின்னணு சாதனங்கள், மரச்சாமான்கள் ஆகியவற்றை தனியாக சேகரித்து அரசு அனுமதி பெற்ற பழைய பொருள்கள் சேகரிக்கும் மையங்களில் வழங்க வேண்டும்.

மேற்படி பொருள்களை பண்டிகை காலங்களில் எரிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது. எனவே பொதுமக்கள் அனைவரும் புகையில்லா போகிப் பண்டிகையாக கொண்டாட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் தீ தடுப்பு சோதனை

பெரிய சூரியூா் புதிய மைதானத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு

கிருஷ்ணகிரியில் தீண்டாமை ஒழிப்பு: முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT