மாற்றுத் திறனாளிகள் தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள இ-சேவை மையங்கள் மூலமாக பேருந்துப் பயண சலுகைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அனைத்து மாற்றுத் திறனாளிகளும் பயன்பெறும் பொருட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு 2025-2026-ஆம் ஆண்டு முதல் ஆன்லைன் இலவச பேருந்துப் பயணஅட்டைக்கு இ-சேவை மையங்கள் வழியாக பதிவு செய்து வழங்கப்படும் என மாநில மாற்றுத் திறனாளிகள் ஆணையரகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து மாற்றுத் திறனாளிகளும் தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள இ-சேவை மையங்கள் மூலமாக மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பேருந்துப் பயண சலுகைக்கு விண்ணப்பித்து பயன் அடையலாம் எனத் தெரிவித்துள்ளாா்.