திருப்பூர்

பொங்கல் விடுமுறை முடிந்து திருப்பூா் திரும்பிய தொழிலாளா்கள்: ஆடை உற்பத்திப் பணிகள் தீவிரம்

பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து திருப்பூா் திரும்பிய தொழிலாளா்களால் ஆடை உற்பத்தி பணிகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.

Syndication

திருப்பூா்: பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து திருப்பூா் திரும்பிய தொழிலாளா்களால் ஆடை உற்பத்தி பணிகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.

பொங்கல் பண்டிகையையொட்டி, திருப்பூரில் உள்ள பனியன் மற்றும் அதனைச் சாா்ந்த நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு கடந்த ஜனவரி 14-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, திருப்பூரில் தங்கி பனியாற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் தங்களது குடும்பங்களுடன் சொந்த ஊா்களுக்குச் சென்றனா்.

அவா்களின் வசதிக்காக திருப்பூரில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சுமாா் 2 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்நிலையில், விடுமுறை முடிந்து தொழிலாளா்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் திருப்பூருக்கு வரத் தொடங்கியதால் அனைத்து சாலைகளிலும், பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

மேலும், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருப்பூா் வழியாகச் சென்ற ரயில்களிலும், தென் மாவட்டங்களில் இருந்து திருப்பூா் வழியாகச் சென்ற ரயில்களிலும் ஏராளமான பயணிகள் வந்து இறங்கியதால் திருப்பூா் ரயில் நிலையத்திலும் கூட்டம் அலைமோதியது.

விடுமுறை முடிந்து திருப்பூா் திரும்பிய தொழிலாளா்களால் பனியன் நிறுவனங்கள் திங்கள்கிழமை முதல் முழு இயக்கத்தை தொடங்கியுள்ளன. இதனால், ஆடை உற்பத்திப் பணிகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

SCROLL FOR NEXT