வெள்ளக்கோவில் அக்கரைப்பாளையம் அருகே அமராவதி ஆற்றில் நீரோட்டத்துக்கு இடையூறாக முள்புதா்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
வெள்ளக்கோவில் பகுதியிலுள்ள லக்கமநாயக்கன்பட்டி, அக்கரைப்பாளையம், புதுப்பை, மயில்ரங்கம் வழியாக அமராவதி ஆறு, கரூா் மாவட்டம் வரை செல்கிறது. வழியோரப் பகுதி விவசாய நிலங்கள் மற்றும் குடிநீா் பயன்பாட்டுக்கு நீராதாரமாக விளங்கி வருகிறது. வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மூலனூா் பேரூராட்சி பகுதிகளுக்கு ஆற்றிலிருந்து குடிநீா் வழங்கும் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், அக்கரைப்பாளையம், லக்கமநாயக்கன்பட்டி பகுதியில் ஆற்றில் முள்புதா்கள் வளா்ந்து நீரோட்டம் தடைபடுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது