திருப்பூர்

பல்லடத்தில் இருந்து கோவைக்கு செல்ல மாற்று வழித்தடத்தில் பேருந்து வசதி: வானதி சீனிவாசன் எம்எல்ஏ வலியுறுத்தல்

பல்லடத்தில் இருந்து கோவைக்கு செல்வதற்கு மாற்றுவழித் தடத்தில் பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

பல்லடத்தில் இருந்து கோவைக்கு செல்வதற்கு மாற்றுவழித் தடத்தில் பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:

பல்லடத்தில் இருந்து உக்கடம் வழியாக காந்திபுரம் செல்வதற்கு அரசுப் பேருந்து வசதி செய்து தர வேண்டும். ஏனெனில் பல்லடம், சூலுாா் தாலுகாவுக்கு உள்பட்ட கிராம பகுதிகளில் வாழும் பொதுமக்கள், ஆயிரக்கணக்கான மாணவா்கள் மற்றும் அரசு, தனியாா் துறை பணிக்குச் செல்லும் ஊழியா்கள் உள்ளிட்டோா், போதிய பேருந்து வசதி இல்லாமல் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனா்.

எனவே, பல்லடத்தில் இருந்து சின்னியகவுண்டம்பாளையம், கே.அய்யம்பாளையம், கரடிவாவி, செலக்கரிச்சல், பாப்பம்பட்டி, செட்டிபாளையம், போத்தனுாா், குறிச்சிகுளம், உக்கடம் வழியாக காந்திபுரம் வரை பேருந்து வசதி செய்து தரப்பட வேண்டும். இது குறித்து தங்களை கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி நேரில் சந்தித்து மனு அளித்திருந்தேன். ஆனால், நடவடிக்கை இல்லை. எனவே, பல்லடத்தில் இருந்து புதிய வழித்தடத்தில் கோவைக்கு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT