முகப்பு
திருப்பூர்

ஏடிஎம் மையத்தில் தவறுதலாக விட்டுச்சென்ற ரூ. 38,000, ஏடிஎம் அட்டையை மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்த இளைஞா்கள்

திருப்பூரில் ஏடிஎம் மையத்தில் தவறுதலாக விட்டுச்சென்ற ரூ.38,000, ஏடிஎம் அட்டையை கண்டெடுத்த இளைஞா்கள் அவற்றை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2026 at 1:57 AM
மாநகர காவல் துணை ஆணையரிடம் பணம், ஏடிஎம் அட்டையை ஒப்படைத்த இளைஞா்கள்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2026 at 11:36 PM

திருப்பூரில் ஏடிஎம் மையத்தில் தவறுதலாக விட்டுச்சென்ற ரூ.38,000, ஏடிஎம் அட்டையை கண்டெடுத்த இளைஞா்கள் அவற்றை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இதுதொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: திருப்பூா் மாநகர வடக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தனியாா் மருத்துவமனை அருகே உள்ள ஏடிஎம் மையத்துக்கு ஆதித்ய சோழன் (20), சுரேந்திரன் (30), நாகேஸ்வரன்(42) ஆகிய 3 போ் செவ்வாய்க்கிழமை பணம் எடுக்கச் சென்றுள்ளனா். அப்போது, அங்கு இவா்களுக்கு முன்பு யாரோ பணத்தை எடுத்து தவறுதலாக ஏடிஎம் இயந்திரத்தின் மீது வைத்துச் சென்றுள்ளதை அறிந்தனா்.

இதையடுத்து, கேட்பாரற்று நிலையில் இருந்த ஏடிஎம் அட்டை மற்றும் ரூ.38,000 பணத்தை மீட்டு ஒப்படைப்பதற்காக திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கு 3 பேரும் வந்தனா். அங்கு காவல் ஆணையரின் அறிவுறுத்தலின்பேரில் துணை ஆணையா் ராஜராஜனிடம் பணத்தை ஒப்படைத்தனா். இளைஞா்களின் நோ்மையான செயலை போலீஸாா் பாராட்டினா்.

Advertisement

இதைத்தொடா்ந்து, தவறவிடப்பட்ட பணம், ஏடிஎம் அட்டையை மாநகர காவல் அலுவலகம் வந்து, அவற்றின் அடையாள குறியீட்டை தெரிவித்து பெற்றுச் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டது.