முகப்பு
திருப்பூர்

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்

காங்கயம் வட்டத்துக்குள்பட்ட அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.

Updated On : 30 ஜனவரி, 2026 at 12:22 AM
காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிய அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2026 at 9:37 PM

காங்கயம் வட்டத்துக்குள்பட்ட அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை வழங்கினாா்.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் வட்டத்துக்குள்பட்ட காங்கயம், முத்தூா், படியூா், நத்தக்காடையூா் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் 571 மாணவ, மாணவிகளுக்கு ரூ.27.47 லட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கி சிறப்புரையாற்றினாா்.

Updated On : 30 ஜனவரி, 2026 at 12:22 AM

மேலும், காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் சாா்பில், காலநிலை மாற்றம் சாா்ந்து இளைய தலைமுறை மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பசுமைப் பள்ளி திட்டத்தை தொடங்கிவைத்தாா்.

Advertisement

இந்நிகழ்ச்சிகளில் காங்கயம் நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ், முத்தூா் பேரூராட்சித் தலைவா் சுந்தராம்பாள், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் சிவக்குமாரி, காங்கயம் நகர திமுக செயலா் வசந்தம் சேமலையப்பன் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.