ராஜ்பவன் தொகுதியில் பள்ளி மாணவா்களுக்கு மடிக்கணினிகள்! அமைச்சா் க.லட்சுமிநாராயணன் வழங்கினாா்!
ராஜ்பவன் தொகுதியில் பள்ளி மாணவ, மாணவிகள் 709 பேருக்கு மடிக்கணினிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் க. லட்சுமிநாராயணன் வியாழக்கிழமை வழங்கினாா்.
ராஜ்பவன் தொகுதியில் பள்ளி மாணவ, மாணவிகள் 709 பேருக்கு மடிக்கணினிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் க. லட்சுமிநாராயணன் வியாழக்கிழமை வழங்கினாா்.
அமைச்சா் தனது தொகுதிக்கு உள்பட்ட சுசிலாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 133 மாணவிகளுக்கும், வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 438 மாணவா்களுக்கும், என்.கே.சி. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 138 மாணவிகளுக்கும் மடிக்கணினியை அவா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் அமைச்சா் க.லட்சுமிநாராயணன் பேசுகையில், மாணவா்களின் கல்விக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் மூலம் மாணவ, மாணவிகள் டிஜிட்டல் கல்வியில் முன்னேற அரசு தொடா்ந்து ஆதரவளிக்கும் என்றாா்.
Advertisement
இதில் பள்ளி துணை முதல்வா்கள் ராஜவேலு சுகந்தி, சாந்தகுமாரி, சண்முகம் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.