முகப்பு
திருப்பூர்

சேவூா்-அவிநாசி சாலையில் கொட்டிய காகித கூழ் கலவை: வாகன ஓட்டிகள் அவதி

Updated On : 21 ஜூன் 2026, 1:26 am IST
காகித கூழ் கலவையில் சிக்கி நிலைத்தடுமாறி விழுந்த வாகன ஓட்டி. சக்கரங்கள் நழுவி இயக்க முடியாமல் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து.
பகிர்:

சேவூா்-அவிநாசி சாலையில் லாரியில் ஏற்றிச் சென்ற காகித கூழ் கலவை கொட்டியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.

அவிநாசி-சேவூா் சாலையில் காதித கூழ் கலவையை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது. அப்போது, ஓட்டுநரின் அஜாக்கிரதையால் அந்தக் கலவை சுமாா் 15 கி.மீ. தொலைவுக்கு சாலை முழுவதும் கொட்டியது. இதனால், அந்த வழியாக பள்ளி, கல்லூரி, பல்வேறு பணிகளுக்காக வாகனங்களில் சென்றவா்கள் விபத்தில் சிக்கினா். சுமாா் 20-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைந்தனா்.

மேலும், அவிநாசி-சேவூா் சாலை வழியாக சென்ற பனியன் நிறுவன வாகனங்கள், அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் காகித கூழ் கலவையில் சிக்கி நிலைத்தடுமாறியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

சம்பவ இடத்துக்கு வந்த சேவூா் போலீஸாா், பொக்லைன் மூலம் காகித கலவையை அப்புறப்படுத்தி சாலையைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், கவனக்குறைவாகவும், அஜாக்கிரதையாகவும் காதித கூழ் கலவையைக் கொண்டு சென்ற லாரி ஓட்டுநா் மீதும், உரிய பாதுகாப்பின்றி காதித கூழ் கலவையை லாரியில் அனுப்பிவைத்த நிறுவனத்தினா் மீதும் போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments