முகப்பு
திருப்பூர்

மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனடியாக செலுத்த அறிவுறுத்தல்

திருப்பூா் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனடியாக செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 3 மார்ச், 2026 at 2:25 AM
திருப்பூா் மாநகராட்சி
பகிர்:
Updated On : 2 மார்ச், 2026 at 8:36 PM

திருப்பூா்: திருப்பூா் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனடியாக செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் தெரிவித்துள்ளதாவது:திருப்பூா் மாநகராட்சி 60 வாா்டுகளுடன் 4 மண்டலங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த 4 மண்டலங்களிலும் சொத்து வரி, காலியிட வரி, குடிநீா்க் கட்டணம், தொழில் வரி, பாதாள சாக்கடை கட்டணம், திடக்கழிவு மேலாண்மை கட்டணம் மற்றும் குத்தகை இனங்கள் ஆகியவற்றுக்கான வரி மற்றும் கட்டண நிலுவை செலுத்த பொதுமக்களின் வசதிக்காக வார நாள்கள் மற்றும் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக செயல்படும் மைய அலுவலக கணிணி வரி வசூல் மையம், 4 மண்டல அலுவலகங்கள், செட்டிபாளையம், தொட்டிபாளையம், நெருப்பெரிச்சல், மண்ணரை, குமரன் வணிக வளாகம், முத்தணம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம் மற்றும் பாண்டியன் நகா் ஆகிய கணிணி வரி வசூல் மையங்களில் பணமாகவோ அல்லது ஆணையாளா், திருப்பூா் மாநகராட்சி என்ற பெயரில் காசோலை அல்லது வரைவோலை மூலமாகவோ வரி மற்றும் கட்டணங்களை செலுத்தலாம்.

Advertisement

மேலும் ணன்ண்ஸ்ரீந் டஹஹ்ம்ங்ய்ற்‘ ா்ழ் ‘தங்ஞ்ண்ள்ற்ங்ழ் & ஹம்ல்; கா்ஞ்ண்ய்‘ ற்ா் ட்ற்ற்ல்ள்://ற்ய்ன்ழ்க்ஷஹய்ங்ல்ஹஹ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இனையதளம் வழியாகவும், கைப்பேசியில் ஜி-பே, போன்-ஃபே மற்றும் பேடிஎம் செயலிகள் மூலமாகவும் வரி மற்றும் கட்டணங்களை செலுத்தலாம் எனத் தெரிவித்துள்ளாா்.