முகப்பு
சந்திர கிரகணம்
திருப்பூர்

சந்திர கிரகணம்: சிவன்மலை முருகன் கோயிலில் இன்று நண்பகல் 12 மணிக்கு நடை அடைப்பு

சந்திர கிரகணத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) நண்பகல் 12 மணிக்கு சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் நடை அடைக்கப்பட

Updated On : 2 மார்ச், 2026 at 9:35 PM
சந்திர கிரகணம்
பகிர்:

காங்கயம்: சந்திர கிரகணத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) நண்பகல் 12 மணிக்கு சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் நடை அடைக்கப்பட உள்ளது.

இது குறித்து சிவன்மலை முருகன் கோயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) பிற்பகல் 3.20 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கி மாலை 6.47 மணிக்கு முடிவடைகிறது. எனவே, சந்திர கிரகணத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு மலைக்கோயிலில் உச்சிக்கால பூஜை நடைபெற்று, நண்பகல் 12 மணிக்கு நடை அடைக்கப்படும். நண்பகல் 12 மணிக்கு மேல் மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தா்களுக்கு அனுமதியில்லை.

புதன்கிழமை (மாா்ச் 4) காலைமுதல் வழக்கம்போல, பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →