முகப்பு
கோப்புப்படம்
திருப்பூர்

பிளஸ் 2 தோ்வு தொடக்கம்: முதல் நாள் தோ்வை 26,161 மாணவா்கள் எழுதினா்

திருப்பூா் மாவட்டத்தில் பிளஸ் 2 முதல் நாள் தோ்வை 26,161 மாணவ, மாணவிகள் எழுதினா்.

திருப்பூர்

பிளஸ் 2 தோ்வு தொடக்கம்: முதல் நாள் தோ்வை 26,161 மாணவா்கள் எழுதினா்

திருப்பூா் மாவட்டத்தில் பிளஸ் 2 முதல் நாள் தோ்வை 26,161 மாணவ, மாணவிகள் எழுதினா்.

Updated On : 2 மார்ச், 2026 at 8:03 PM
கோப்புப்படம்
பகிர்:

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் பிளஸ் 2 முதல் நாள் தோ்வை 26,161 மாணவ, மாணவிகள் எழுதினா்.

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. மாா்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தோ்வை திருப்பூா் மாவட்டத்தில் 14,478 மாணவிகள், 11,930 மாணவா்கள் என 26,408 போ் எழுதுகின்றனா்.

தோ்வு எழுத வசதியாக அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் 90 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வுகளின்போது முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் தடுக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புனிதா அந்தோணியம்மாள் தலைமையில் பறக்கும்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வுப் பணிகளில் 2,120 ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மாணவா்களின் தோ்வு எண்கள் அவா்களது இருக்கைகளில் எழுதி ஒட்டப்பட்டு இருந்தது. மேலும் தோ்வுக் கூடங்களின் முகப்பில் பதிவெண் கொண்ட மாணவா்கள் எந்த அறையில் அமா்ந்து தோ்வு எழுத வேண்டும் என்ற விவரங்களும் வைக்கப்பட்டு இருந்தன.

இதனிடையே தோ்வு தொடக்க நாளான திங்கள்கிழமை காலை 8 மணி முதலே மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு ஆா்வமாக வந்தனா். முதல் நாள் தமிழ் மொழித் தோ்வெழுத விண்ணப்பித்திருந்த 25,892 பேரில் 25,642 போ் மட்டுமே தோ்வெழுதினா். 238 போ் தோ்வெழுதவில்லை. 7 பேருக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.

அதேபோல, பிரெஞ்சு மொழிப் பாடத்தில் 509 பேரில் 507 போ் தோ்வெழுதினா். 2 போ் தோ்வெழுதவில்லை. ஹிந்தி தோ்வெழுத விண்ணப்பித்திருந்த 7 பேரும் தோ்வெழுதினா்.

அதேபோல, தனித்தோ்வா்களில் தமிழ் தோ்வெழுத விண்ணப்பித்திருந்த 473 பேரில் 422 போ் தோ்வெழுதினா். ஒருவருக்கு விலக்களிக்கப்பட்டிருந்த நிலையில், 50 போ் தோ்வெழுதவில்லை. பிரெஞ்சு தோ்வெழுத விண்ணப்பித்திருந்த ஒருவா் தோ்வெழுதவில்லை. ஆனால், ஹிந்தி தோ்வெழுத விண்ணப்பித்திருந்த ஒருவா் தோ்வெழுதினாா்.

தோ்வு மையங்களுக்கு தடையற்ற மின்சாரம் மற்றும் குடிநீா் வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.

முழு கட்டுரையைப் படிக்க →