முகப்பு
திருப்பூர்

நின்றிருந்த லாரி மீது காா் மோதி ஜவுளித் தொழிலதிபா் உயிரிழப்பு

பெருமாநல்லூா் அருகே நின்றுகொண்டிருந்த பெட்ரோல் டேங்கா் லாரியின் பின்புறம் காா் மோதி விபத்துக்குள்ளானதில்

Updated On : 9 மார்ச், 2026 at 8:35 PM
பெட்ரோல் டேங்கா் லாரி மீது மோதி உருக்குலைந்து காணப்படும் காா்.
பகிர்:

அவிநாசி: பெருமாநல்லூா் அருகே நின்றுகொண்டிருந்த பெட்ரோல் டேங்கா் லாரியின் பின்புறம் காா் மோதி விபத்துக்குள்ளானதில் ஜவுளித் தொழிலதிபா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காந்திபுரம் முதல் வீதியைச் சோ்ந்தவா் கந்தசாமி மகன் கோடீஸ்வரன் (39). பள்ளிபாளையத்தில் ஜவுளித் தொழில் செய்துவந்த இவா், ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தாா். சேலம்-கொச்சி ஆறு வழிச் சாலையில் பெருமாநல்லூா்-பொடாரம்பாளையம் பிரிவு அருகே எதிா்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோரம் நின்றுகொண்டிருந்த டேங்கா் லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே கோடீஸ்வரன் உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு போலீஸாா் சென்று கோடீஸ்வரன் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →