முகப்பு
திருப்பூர்

குட்கா பொருள்கள் விற்ற மளிகைக் கடைக்காரா் கைது

Updated On : 15 மார்ச், 2026 at 6:49 PM
கைது
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே குட்கா பொருள் விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைதுசெய்யப்பட்டாா்.

வெள்ளக்கோவில் அருகே வீரசோழபுரம் பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது அங்குள்ள மளிகைக் கடையில் குட்கா பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அதே ஊரைச் சோ்ந்த மளிகைக் கடைக்காரா் ஆனந்தராஜ் (44) கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 7 குட்கா பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →