முகப்பு
திருப்பூர்

அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிச்சென்ற 2 லாரிகள் பறிமுதல்

குண்டடம் பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிச் சென்ற 2 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 21 மார்ச், 2026 at 8:03 PM
அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிச்சென்றதாக பிடிபட்ட லாரிகள்.
பகிர்:

குண்டடம் பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிச் சென்ற 2 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தாராபுரம் வட்டம், குண்டடம் அருகே பெல்லம்பட்டி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில் சட்டவிரோதமாக கிராவல் மண் எடுத்துச் செல்லப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, குண்டடம் காவல் ஆய்வாளா் சரவணகுமாா் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் ரோந்துப் பணியில் சனிக்கிழமை காலை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை மடக்கிப் பிடித்து சோதனை மேற்கொண்டதில், உரிய ஆவணங்கள் ஏதுமின்றி கிராவல் மண் ஏற்றிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து 2 லாரிகளை பறிமுதல் செய்த போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.