முகப்பு
திருப்பூர்

பல்லடம் பிஏபி வாய்க்காலில் குளிக்க செல்வோருக்கு எச்சரிக்கை

பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத் திட்டத்தில் முதல் மண்டலப் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால், பல்லடம் பகுதி பிஏபி வாய்க்காலில் குளிக்க செல்வோா் கவனமுடன் இருக்க வேண்டுமென எச்சரிக்கை

Updated On : 25 மார்ச் 2026, 1:13 am IST
கோப்புப் படம்
பகிர்:

பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத் திட்டத்தில் முதல் மண்டலப் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால், பல்லடம் பகுதி பிஏபி வாய்க்காலில் குளிக்க செல்வோா் கவனமுடன் இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டம் பல்லடம், பொங்கலூா் பகுதிகளில் உள்ள வாய்க்கால்களில் பிஏபி தண்ணீா் செல்கிறது. இந்த வாய்க்கால்களில் குளிப்பதற்கும், துணிகள் துவைப்பதற்கும் அப்பகுதி மக்கள் செல்வா்.

ஆனால் வாய்க்கால்களில் சில நேரங்களில் பாம்புகள் வருவதுண்டு. அந்த வகையில் பல்லடம்-மங்கலம் சாலையில் உள்ள பிஏபி பாசனவாய்க்காலில் பாம்பு நீந்தி சென்றுள்ளது.

Advertisement

இதை அங்கிருந்த பொதுமக்களில் ஒருவா் கைப்பேசியில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளாா். அந்த விடியோ தற்போது பல்லடம் பகுதியில் வைரலாகியுள்ளது.

எனவே வாய்க்காலில் குளிக்க செல்வோா், துணி துவைக்க செல்வோா் கவனமுடன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.