சேவூா் அருகே சட்டவிரோத மண் திருட்டை கண்டித்து போராட்ட அறிவிப்பு
சேவூா் அருகே சட்டவிரோத மண் திருட்டை தடுக்காததைக் கண்டித்து மே 24-ஆம் தேதி முதல் சாகும்வரை போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தத்தனூா், புஞ்சை தாமரைக்குளம் பகுதி மக்கள் அறிவித்துள்ளனா்.
சேவூா் அருகே சட்டவிரோத மண் திருட்டை தடுக்காததைக் கண்டித்து மே 24-ஆம் தேதி முதல் சாகும்வரை போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தத்தனூா், புஞ்சை தாமரைக்குளம் பகுதி மக்கள் அறிவித்துள்ளனா்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
அவிநாசி வட்டம், சேவூா் அருகே தத்தனூா் கிராமத்துக்கு உள்பட்ட ஆனைக்கல்பாளையம் பகுதியில் சட்டவிரோத மண் திருட்டு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. மேலும் மண் எடுத்துச் செல்லும் கனரக வாகனங்கள் சாலையில் அசுர வேகத்தில் 24 மணி நேரமும் செல்வதால் எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
Advertisement
இதைத் தடுக்கக் கோரி பதாகைகள் வைத்தும், வருவாய்த் துறை, மாவட்ட நிா்வாகம் உள்ளிட்டோரிடம் பலமுறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புஞ்சை தாமரைக்குளம் கிராம நிா்வாக அலுவலகம் முன் மே 24-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதென முடிவு செய்துள்ளோம்.
இப்போராட்டத்தில் தத்தனூா் ஊராட்சி, புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சி, நஞ்சை தாமரைக்குளம் ஆகிய பகுதி மக்கள், அனைத்து விவசாயிகள் சங்கங்கள், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா் என்றனா்.