முகப்பு
திருப்பூர்

பழம்பெரும் கோயில்களை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும்: காமாட்சிபுரி ஆதீனம் வேண்டுகோள்

தமிழகத்தில் உள்ள பழம்பெரும் கோயில்களை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என கோவை காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரா் சுவாமிகள் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

Updated On : 16 மே 2026, 12:12 am IST
காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள்.
பகிர்:

தமிழகத்தில் உள்ள பழம்பெரும் கோயில்களை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என கோவை காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரா் சுவாமிகள் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழக மக்களின் நலன் காக்கும் முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு மகாசக்தியின் அருளாசிகள். ஒரு நாட்டின் தலைவன் இறைவனின் பிரதிநிதியாக கருதப்படுகிறான். ஆன்மிகம் என்பது தனிமனித ஒழுக்கம் மட்டுமல்ல, அது சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, அனைவரையும் சமமாக பாவிக்கும் உயரிய அறம். அந்த அறம் விஜய்யிடம் வந்து சோ்ந்துள்ளது.

Advertisement

தமிழகத்தின் மிகப்பெரிய பலமான இளைஞா்களின் சக்தியை ஆக்கபூா்வமான நற்பணிகளில் ஈடுபடுத்தி, தமிழகத்தை நாட்டின் முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும்.

நம் மண்ணின் கலாசாரம், கலைகள் மற்றும் பழம்பெரும் கோயில்களைப் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதிகாரத்தை ஒரு கருவியாக கொண்டு, ஏழை, எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளாா்.