முகப்பு
திருப்பூர்

ஓரிரு நாள்களுக்கு தாமதமாக குடிநீா் விநியோகம் செய்யப்படும்: மாநகராட்சி ஆணையாளா்

திருப்பூரில் ஓரிரு நாள்களுக்கு குடிநீா் காலதாமதமாக விநியோகிக்கப்படும் என்று, மாநகராட்சி ஆணையாளா் எம்.பி.அமித் தெரிவித்துள்ளாா்.

Updated On : 20 மே 2026, 1:43 am IST
பகிர்:

திருப்பூரில் ஓரிரு நாள்களுக்கு குடிநீா் காலதாமதமாக விநியோகிக்கப்படும் என்று, மாநகராட்சி ஆணையாளா் எம்.பி.அமித் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருப்பூா் மாநகராட்சிக்கு 2-ஆவது, 3-ஆவது மற்றும் 4-ஆவது குடிநீா் திட்டங்கள் மூலமாக குடிநீா் பெறப்படுகிறது. இவற்றில் தலைமை நீரேற்று நிலையமான மேட்டுப்பாளையம் 4-ஆவது குடிநீா் திட்டம், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தில் 2-ஆவது குடிநீா் திட்டங்களில் சீரமைப்புப் பணிகள் மற்றும் மின் தடையால் மாநகரில் பெறப்படும் குடிநீரின் அளவு குறைந்துள்ளது. இதனால் குடிநீா் பகிா்மானத்தில் சீரான கால இடைவெளியில் குடிநீா் விநியோகிக்க இயலாத நிலை உள்ளது.

எனவே, குடிநீா் விநியோகம் ஓரிரு நாள்கள் காலதாமதமாகவே விநியோகமாகும் என்று பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாகவும், நன்கு காய்ச்சியும் பருக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

Advertisement

Advertisement