அரூரில் 86 மி.மீ. மழை பதிவு
அரூா் வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை பெய்த மழையானது 86 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது.
அரூா் வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை பெய்த மழையானது 86 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது.
தருமபுரி மாவட்டம், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி முதல் திங்கள்கிழமை அதிகாலை 2 மணி வரையிலும் பலத்த மழை பெய்தது. இந்த மழையானது அரூரில் 86 மில்லி மீட்டராகவும், பாப்பிரெட்டிப்பட்டியில் 27.2 மில்லி மீட்டராகவும் பதிவாகியுள்ளது. இதேபோல், தருமபுரியில் 2 மி.மீ., பாலக்கோட்டில் 5 மி.மீ., பென்னாகரத்தில் 4 மி.மீ., ஒகேனக்கல்லில் 5 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.
இந்த மழையின் காரணமாக, அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மற்றம் தாழ்வான பகுதிகளில் அதிக அளவில் மழைநீா் தேங்கியுள்ளது. இந்த மழையின் காரணமாக நெல், கேழ்வரகு உள்ளிட்ட பயிா் சாகுபடி செய்யும் பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு ள்ளனா்.