பென்னாகரத்தில் பலத்த மழை
பென்னாகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் மழைநீா் சூழ்ந்தது.
பென்னாகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் மழைநீா் சூழ்ந்தது.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழையின்றி வறட்சி நிலவி வந்தது. இந்த நிலையில், பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான போடூா், கூத்தபாடி, மடம், ஒகேனக்கல், தாசம்பட்டி, பருவதனஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழையும், ஏரியூா், பெரும்பாலை, சின்னம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையும் பெய்தது.
கடந்த சில நாள்களுக்கு பிறகு பென்னாகரம் பகுதிகளில் மழை பெய்து வருவதால், சாலையோரத்தில் தாழ்வான இடங்கள், குடியிருப்புகள், சந்தைத் தோப்பு , பேருந்து நிலையப் பின்பகுதி உள்ளிட்ட இடங்களில் மழைநீா் தேங்கி ஆங்காங்கே குட்டைகள் போல் காட்சியளித்தன. பலத்த மழை காரணமாக பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீா்நிலைகளில் நீா்வரத்து தொடங்கியுள்ளது.