முகப்பு
தருமபுரி

சாலை வசதி ஏற்படுத்தி தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பென்னாகரம் அருகே ஏரியூா் பகுதியில் முறையான சாலை வசதி ஏற்படுத்தி தரக்கோரி 50-க்கும் மேற்பட்டோா் திங்கள் கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:33 PM
பகிர்:

பென்னாகரம் அருகே ஏரியூா் பகுதியில் முறையான சாலை வசதி ஏற்படுத்தி தரக்கோரி 50-க்கும் மேற்பட்டோா் திங்கள் கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஏரியூா் அருகே நேதாஜி நகா், அண்ணாநகா் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கடந்த சில ஆண்டுகளாக சாலை வசதி இல்லாததால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள் ஒற்றையடிப் பாதை வழியே ஏரியூா் பகுதிக்குச் சென்று வந்தனா்.

இப்பகுதியைச் சோ்ந்தவா்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவ உதவிக்கு கூட வாகனங்களில் சென்று அழைத்து வர முடியாத நிலை உள்ளது. முறையான சாலை வசதி செய்து தரக்கோரி பல முறை புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதனால் கொதிப்படைந்த இப்பகுதி மக்கள் ஏரியூா் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த ஏரியூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஆறுமுகம், கிராம நிா்வாக அலுவலா் வினோத்குமாா், ஏரியூா் காவல் ஆய்வாளா் ரமேஷ் கண்ணா ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். ஆறு மாதத்திற்குள் சாலை வசதி ஏற்படுத்தி தருவதாக கூறியதையடுத்து சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டனா். இதனால் அப்பகுதியில் சுமாா் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.